Saturday, January 29, 2011

அழகர்கோயில் சாலையில் விபத்துக்கள் அதிகரிப்பு 2 நாளில் போலீஸ் உட்பட நால்வர் பலி

Saturday, January 29, 2011
அழகர்கோவில்:அழகர்கோவில் ரோட்டில் வாகனங்களை அதிவேகமாக ஓட்டுவதால் தொடர் விபத்துக்கள் ஏற்படுகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் மூன்று விபத்துக்களில் போலீஸ், கல்லூரி மாணவி, மாணவர் உட்பட நான்கு பேர் பலியாயினர். மதுரை அருகே அழகர்கோவில் மலையின் அடிவாரத்தில் பெருமாள் கோயிலும்,மலை மீது சோலைமலை முருகன் கோயில் மற்றும் நூபுரகங்கை தீர்த்தம் உள்ளது.இங்கு சுவாமி கும்பிடவும், சுற்றுலா பயணிகளும் பல்வேறு பகுதிகளில் இருந்துதினமும் ஏராளமானோர் வருகின்றனர். மலைப்பாதையில் காதலர்கள் திரிவதை பார்க்க முடிகிறது. இதனால் இந்த ரோட்டில் எப்போதும் போக்குவரத்து அதிகமாக உள்ளது.ஒரு வழிப் பாதையாக இருந்த இந்த ரோடு ஐந்து ஆண்டுகளுக்கு முன்இருவழிப் பாதையாக மாற்றப்பட்டது. கனரக வாகனங்கள், கார்கள் அதிவேகமாக செல்கின்றன. டூவீலர்களில் செல்பவர்களும் தங்களால் முடிந்தளவு வேகமாகசென்று விபத்தில் சிக்குவது வழக்கமாக உள்ளது. அதுவும் காதல் ஜோடிகள் செல்லும் வேகத்திற்கு அளவே இல்லை.
2 நாளில் 4 பேர் பலி:அப்பன்திருப்பதி - கள்ளந்திரி ரோட்டில் கடந்த இரண்டு நாட்களில் நடந்தமூன்று விபத்துக்களில் போலீஸ், கல்லூரி மாணவி, மாணவர் உட்பட நான்கு பேர் பலியாகி உள்ளனர். சுந்தரராஜன்பட்டியை சேர்ந்த சகருப்பையா மகன் சசசிகுமார் (25). இவர், எலெக்ட்ரிக்கல் கடை உரிமையாளர். நேற்று முன்தினம் காலைஸ்பிளெண்டர் பிளஸ் டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) அரும்பனூர் விலக்குஅருகே செல்லும்போது, எதிரில் வந்த இண்டிகா கார் மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் நேற்று இறந்தார்.
அய்யர்பங்களா இ.பி., காலனியை சேர்ந்தவர் கல்லூரி மாணவி ராதிகா (20).இவரும், சென்னை கிரசன்ட் கல்லூரி மாணவர் பிரபுவும் (20) (ஹெல்மெட் அணியவில்லை),ஸ்கூட்டி டூவீலரில் நேற்று முன்தினம் அழகர்கோயில் சென்று விட்டு மாலையில்மதுரை நோக்கி வந்தனர். கள்ளந்திரி பாலம் அருகே பைக் மீது மாருதி ஸ்விப்ட்கார் மோதியது. இதில் இருவரும் பலியாயினர்.
கிடாரிப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (25). திருமணமாகி விவாகரத்து ஆனவர்.மதுரை நகர ஆயுதப்படையில் கான்ஸ்டபிள். அவர், மீனாட்சி அம்மன் கோயில்பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்பட்டார். நேற்று டூட்டி பார்ப்பதற்காக காலைஐந்து மணிக்கு கிடாரிப்பட்டியில் இருந்து ஸ்பிளண்டர் பிளஸ் டூவீலரில்சென்றார். திருவிழான்பட்டி அருகே வந்தபோது, எதிரில் வந்த டவுன் பஸ் (டிஎன்58 என் 1661), டூவீலர் மீது மோதியது. இதில்
மணிகண்டன் பலியானார். டிரைவர் மன்மதனை போலீசார் கைது செய்தனர். கடந்தஜன., முதல் நேற்று வரை விபத்தில் சிக்கிய ஏழு பேர் பலியாகி உள்ளனர். 16 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்தை தடுக்கும் வழி:அழகர்கோயில் சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடிவிபத்து ஏற்படுவது வழக்கமாகி விட்டது. கள்ளந்திரி கால்வாய் இருபுறமும் வேகத்தடை அமைக்க வேண்டும். காதலர்கள் தங்களின் புகலிடமாகஅழகர்கோயில் மலையை மாற்றியுள்ளனர். இங்கு சுற்றித்திரியும் காதலர்களை அவரவர் பெற்றோரிடம் ஒப்படைத்து எச்சரிக்கை விடுக்க வேண்டும். வேகமாக செல்லும் வாகனங்களை மடக்கி அபராதம் விதிக்க வேண்டும். சாலையோரம் மேய்ச்சலுக்கு கால்நடைகளை திரிய விடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அழகர்கோயில்மலைப்பகுதியில் கூடுதல் போலீசார் நியமிக்க வேண்டும். மலைப்பகுதியில்30 கி.மீ., வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்களை போலீசார் பறிமுதல்செய்ய வேண்டும்.

Courtesy : http://www.dinamalar.com/district_detail.asp?id=176439

0 comments:

Post a Comment

 
Madurai -The City Never Sleeps ◄Design by Pocket, BlogBulk Blogger Templates