Wednesday, January 26, 2011

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பாதுகாப்பு கேள்விக்குறி

Wednesday, January 26, 2011
 Summer at Willow Lake   The King Is Dead
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், போலீஸ் பற்றாக்குறை இருப்பதால், பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. மத்திய உளவுப்பிரிவு அறிவுரைபடி, கோயில் உள்பிரகாரங்களில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தால் மட்டுமே, பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாக்க முடியும். இதைகருத்திற்கொண்டு,அங்கு போதுமான போலீசாரை நியமிக்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இக்கோயிலுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டலும், பயங்கரவாத அச்சுறுத்தலும் வருகிறது. தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தாலும், "அது போதாது' என்கிறது மத்திய உளவுத்துறை. கோயிலில் என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று மாதந்தோறும் அறிவுரை வழங்குகிறது. இதை உள்ளூர் போலீசார் செயல்படுத்துகிறார்களா என்று மாநில நுண்ணறிவு பிரிவு மற்றும் மத்திய உளவுத் துறை அதிகாரிகளும் ஆய்வு செய்கின்றனர்.

தற்போது போலீஸ் பற்றாக்குறையால் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. கடந்த 1995ல் அம்மன் சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் குண்டு வெடித்தது. இதைதொடர்ந்து, காலையில் 28 போலீசாரும், மாலையில் 28 போலீசாரும் சுழற்சி முறையில், கோயிலின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தற்போது இந்த எண்ணிக்கை பத்திற்கும் கீழாக குறைந்து விட்டதால், உள்பிரகாரங்களில் போலீசாரை பார்ப்பதே அரிதாக உள்ளது. இதற்கு பதில், மத்திய அதிரடிப்படை வீரர்களை சுழற்சி முறையில் பாது காப்பு பணியில் ஈடுபடுத்தினால் மட்டுமே கோயிலை முழுமையாக பாதுகாக்க முடியும். போலீசார் கூறியதாவது : தற்போது ஆயுதப்படை போலீசாருக்கு வருடாந்திர கவாத்து பயிற்சி நடப்பதால், அவர்களது பணியையும் உள்ளூர் போலீசாரே செய்ய வேண்டியுள்ளது. இதனால்தான் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மத்திய உளவுத்துறை அறிவுறுத்தல்படி, கோயிலில் 225 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். இதை செயல்படுத்த தமிழக அரசும் தயாராக இருக்கிறது. பற்றாக்குறையை சமாளிக்க, ஆறாவது சிறப்பு பட்டாலியன் பிரிவில் கவாத்து பயிற்சிகளை மட்டுமே செய்து கொண்டி ருக்கும் போலீசாரை, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தலாம்.

இதுகுறித்து உயர் அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும், என்றனர்.போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ""போலீஸ் ஸ்டேஷன்கள் அனைத்தும் "ஹெவி, மீடியம், லைட்' என்று தரம் பிரிக்கப்பட்டுள்ளது. தரத்திற்கேற்ப போதுமான போலீசார் நியமிக்கப்படுவர். மீனாட்சி கோயில் ஸ்டேஷன் "ஹெவி' தரத்தின்கீழ் வருவதால், ஆள் பற்றாக்குறை என்பது இனி இருக்காது,'' என்றார். ஆள் பற்றாக்குறையை காரணம் காட்டி, புராதன சின்னமாக, உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் மீனாட்சி அம்மன் கோயிலின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குவது நியாயமா? அதிகாரிகள் சிந்திப்பார்களா?

The Adventures of Sherlock Holmes

Courtesy : http://www.dinamalar.com/district_detail.asp?id=174763

0 comments:

Post a Comment

 
Madurai -The City Never Sleeps ◄Design by Pocket, BlogBulk Blogger Templates