Wednesday, January 26, 2011

மதுரையில் குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாட்டம்

Wednesday, January 26, 2011

மதுரை:மதுரையில் 62வது குடியரசு தினவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.ஆயுதப்படை மைதானத்தில் கலெக்டர் காமராஜ் கொடியேற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அரசு துறைகள் சார்பில் 58 பயனாளிகளுக்கு 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார். போலீசார் 25 பேருக்கு தமிழக முதல்வரின் பதக்கங்களை வழங்கினார். தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர்.மாவட்ட எஸ்.பி., மனோகர், போலீஸ் துணை கமிஷனர் ராஜேந்திரன், மாநகராட்சி துணை கமிஷனர் தர்ப்பகராஜ், ஊரகவளர்ச்சித் துறை திட்டஅதிகாரி சாமுவேல் இன்பதுரை, மாவட்ட வழங்கல் துறை அதிகாரி முருகையா, ஆர்.டி.ஓ., சுகுமாறன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் மோகன்தாஸ், பி.ஆர்.ஓ., அண்ணா, ஏ.பி.ஆர்.ஓ.,க்கள் சாலிதளபதி, கதிரவன், மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலர் கனகராஜ், தாசில்தார்கள் கமலசேகரன், பாஸ்கரன், போலீஸ் உதவிகமிஷனர்கள் கணேசன், மகுடபதி, சுருளிராஜா, அரசு ஆஸ்பத்திரி டீன் சிவக்குமார், ஆர்.எம்.ஓ.,க்கள் பிரகதீஸ்வரன், திருவாய்மொழி பெருமாள் உட்பட 290 பேருக்கு சிறந்த பணிக்கான விருது வழங்கப்பட்டது.நன்மாறன் எம்.எல்.ஏ., தென்மண்டல ஐ.ஜி., கிருஷ்ணமூர்த்தி, போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியன், டி.ஐ.ஜி.,சந்தீப் மித்தல் பங்கேற்றனர். மாநகராட்சியில் மேயர் தேன்மொழி கொடியேற்றினார்.

கமிஷனர் செபாஸ்டின், துணைமேயர் மன்னன், தலைமை பொறியாளர் சக்திவேல், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். அரசு துறைகள், கட்சிகள், அமைப்புகள் :மதுரை குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில், மேற்பார்வை பொறியாளர் அகிலன் கொடியேற்றினார். தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தில் தலைவர் ஜெயபிரகாசம் கொடியேற்றினார். செயலாளர் வேல்சங்கர், பொருளாளர் கதிர்வேல், துணைத் தலைவர்கள் முனியப்பன், சுபாஷ் சந்திரபோஸ் பங்கேற்றனர். மதுரை 69வது வார்டு காங்., சார்பில் பொட்டக்குளம், பொன்மேனியில் கவுன்சிலர்கள் சிலுவை, சுப்புராம் கொடியேற்றினர். நிர்வாகிகள் காந்தி, குமார், ஈடாடி பங்கேற்றனர். ஜனதா தளம் சார்பில் விளக்குத்தூண் காமராஜர் சிலைக்கு தலைவர் ராஜேந்திரன் தலைமையில் பொதுச் செயலாளர் ஜான்மோசஸ் மாலை அணிவித்தார். சிம்மக்கல் காமகோடி முதியோர் இல்லத்தில், செயலாளர் டாக்டர் ராமசுப்பிரமணியன் தலைமையில், மதுரைக்கல்லூரி இயக்குனர் தேவிபிரசாத் கொடியேற்றினார். மதுரை சிட்டி லயன்ஸ் கிளப் சார்பில், தலைவர் சுப்பிரமணியன் கொடியேற்றினார். செயலாளர்கள் பொன்னுச்சாமி, ரமேஷ் காங்கர், ஏற்பாடு குழுத் தலைவர் சுரேஷ்பாபு பங்கேற்றனர்.

மதுரை பருத்தி விதை, புண்ணாக்கு வியாபாரிகள் சங்கத்தில், செயலாளர் கந்தசாமி, பொருளாளர் ஆபிரகாம்லிங்கன் தலைமையில் தலைவர் ராமநாதன் கொடியேற்றினார். பள்ளி, கல்லூரிகள் :நெல்பேட்டை உமறுபுலவர் மாநகராட்சி பள்ளியில், தலைமையாசிரியை மீனாட்சி தலைமையில் கவுன்சிலர் ராலியா பானு கொடியேற்றினார். வன்னிவேலம்பட்டி அரசு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சுப்புராஜ் தலைமையில், பஞ்., தலைவி சரஸ்வதி கொடியேற்றினார். தலைமையாசிரியர் பாஸ்கரன், துவக்கப்பள்ளி தலைமையாசிரியை சுமதி பங்கேற்றனர். ஆசிரியை அய்யம்மாள் நன்றி கூறினார். வையூர் துவக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் விஜயபார்த்திபன், டி.கல்லுப்பட்டி வட்டார வளமையத்தில் மேற்பார்வையாளர் முத்தையா கொடியேற்றினர். சவுராஷ்டிரா பள்ளியில் அரசு போக்குவரத்து மேற்கு கோட்ட மேலாளர் முருகேசன் கொடியேற்றினார். தாளாளர் ஏ.கே.ராமமூர்த்தி, தலைமையாசிரியர்கள் சவுந்திரராஜன், மகேஸ்வரி, சவுராஷ்டிரா கவுன்சில் தலைவர் சங்கரன், பொருளாளர் பாண்டுரங்கன் மற்றும் நிர்வாககுழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். மதுரைக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் செந்தூரன் தலைமையில், ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பிரமணியன் கொடியேற்றினார்.

உதவி தலைமையாசிரியர்கள் சீனிவாசன், மருதமுத்து பங்கேற்றனர். மதுரை சமூகவியல் கல்லூரியில் தலைவர் ராஜா தலைமையில் வெங்கிடுசாமி கொடியேற்றினார். முதல்வர் நாராயணராஜா, பேராசிரியர்கள் பங்கேற்றனர். சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியில்,தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமையில், டாக்டர் பாஸ்கரராஜன் கொடியேற்றினார். செயலாளர் கரிக்கோல்ராஜ், முதல்வர் கவுசில்யா பங்கேற்றனர். மதுரை சிவகாசி நாடர் பயோனியர் மீனாட்சி மகளிர் கல்லூரியில் தலைவர் சிதம்பரம், சிவகாசி நாடார் மெட்ரிக் பள்ளியில் டாக்டர் ரஜினிபிரேமலதா கொடியேற்றினர். புதூர்: மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் குடியரசு தினவிழா ஆணையர் லட்சுமி முன்னிலையில் நடந்தது. சேர்மன் கண்ணன் தலைமை வகித்து கொடியேற்றினார். துணைத் தலைவர் சுரேந்திரன், கவுன்சிலர்கள் தண்டீஸ்வரன், மதிவாணன், அய்யாவு, யோகசுந்தரி ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு,பரிசுகள் வழங்கப்பட்டன.பள்ளி, கல்லூரிகள் புதூர் கற்பகவிநாயகர் பள்ளியில் குடியரசு தினவிழா நடந்தது. முதல்வர் செந்தில்குமாரி கொடியேற்றினார். மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள், பிரமிடு சாகசங்களை செய்தனர். விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏழாம் வகுப்பு மாணவி ஹர்ஷிணி சாம்பியன் பட்டம் வென்றார். மதுரை யாதவர் கல்வியியல் கல்லூரியில் நடந்த விழாவிற்கு முதல்வர் கணபதி தலைமைவகித்தார். மேற்கு ஒன்றிய சேர்மன் கண்ணன் கொடியேற்றினார். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். உறுப்பினர் ஜெயக்கொடி நன்றி கூறினார். வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் செல்வகுமரேசன் தலைமையில் குடியரசு தினவிழா நடந்தது. ஊராட்சி தலைவர் குணசேகரபாண்டியன் கொடியேற்றினார். மகளிர் சுயஉதவிக் குழுவினர், மாணவர்கள், கிராம கல்விக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Courtesy :http://www.dinamalar.com/district_detail.asp?id=174704

0 comments:

Post a Comment

 
Madurai -The City Never Sleeps ◄Design by Pocket, BlogBulk Blogger Templates