ஆக்கிரமிப்பில் சர்வீஸ் ரோடுகள் மாநகராட்சி எச்சரிக்கை
மதுரை:""மதுரையில் சர்வீஸ் ரோடுகள், தெருக்களின் சாலைகளை ஆக்கிரமிப்பு செய்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் மூலம் வாகனங்கள் பறிமுதல் செய்யப் படும்,'' என, மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் எச்சரிக்கை செய்துள்ளார்.மதுரை காளவாசல் - பழங்காநத்தம் பைபாஸ் ரோட்டின் இருபுறமும் பல கோடி ரூபாய் மதிப்பில் சர்வீஸ் ரோடுகள் அமைக்கப்பட்டன. இவற்றை பயன்படுத்த முடியாதபடி வாகனங்களை நிறுத்துகின்றனர். சர்வீஸ் ரோடு பகுதியில் தனியார் விற்பனை ÷ஷாரூம்கள் உள்ளன. இங்கு வருபவர்கள், சர்வீஸ் ரோட்டில் வாகனங்களை நிறுத்துகின்றனர். இடப்பற்றாக்குறை ஏற்படும்போது, பைபாஸ் ரோட்டிலேயே நிறுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.நரிமேடு சத்தியமூர்த்தி தெரு, செல்லூர் பகுதிகளில் சிமென்ட் கலவை வாகனங்களை வரிசையாக நிறுத்தி சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் காலை, மாலையில் பள்ளி செல்லும் வாகனங்கள் சாலையை கடக்க முடியாமல் நெரிசலில் சிக்குவது வழக்கமாக உள்ளது. மாநகராட்சி எல்லைக்குள் பல கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் கால்வாய்கள் கட்டும் பணி, 33 கோடி ரூபாய் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இப்பணிக்காக வரவழைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான இயந்திரங்களை சர்வீஸ் ரோடுகள், நரிமேடு, செல்லூர் உள்ளிட்ட ஜனநெருக்கடி மிகுந்த தெருக்களில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் கூறும்போது, ""சர்வீஸ் ரோடுகள், தெருக்களின் சாலைகளை ஆக்கிரமிப்பு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போலீசார் மூலம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்,'' என, எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Courtesy :http://www.dinamalar.com/district_detail.asp?id=169871
---------------------------------------------------------------------------------------------------------
மதுரையில் குறைந்தது மணல் விலை : ஒரு லோடு ரூ.5000
மதுரை : மதுரையில் கடந்த வாரம் மணல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தால், ஒரு லோடு(10 டன்) 10 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்தது. தற்போது பாதிக்கு பாதி குறைந்துள்ளதால், அரைகுறையாக நின்ற கட்டுமான பணிகள் தீவிரமடைந்துள்ளன. மதுரைக்கு அருகில் உள்ள தூதை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கமுதக்குடியில் இருந்து மணல் அள்ளப்படுகிறது. ஒரு லோடு மணலை ரூ.1700க்கு எடுத்துக் கொண்டு வரும் லாரி உரிமையாளர்கள், போக்குவரத்து செலவு லோடுமேன் கூலி, டிரைவர் படி என 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்றனர். இந்நிலையில், ஆற்றில் மணல் அள்ளுவதற்கு கோர்ட் விதித்த சில கட்டுப்பாடுகளை எதிர்த்து கடந்த வாரம் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் ஒரு லோடு 10 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டது. பின், வேலைநிறுத்தம் விலக்கி கொள்ளப்பட்டதை தொடர்ந்து, தற்போது நகர் பகுதியில் 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. புறநகர் பகுதியில் கூடுதலாக 500 ரூபாய்க்கு விற்கப்படுவதாக, மதுரை மணல் லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் ரவிராஜன் கூறினார்.
செங்கல், இரும்பு, சிமென்ட் என கட்டுமான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்த நிலையில் மணல் விலையும் உயர்ந்ததால், கட்டடம், வீடு கட்டும் பணி பாதிக்கப்பட்டது. தற்போது மணல் விலை குறைந்துள்ளதால், கட்டுமான பணிகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.
Courtesy :http://www.dinamalar.com/district_detail.asp?id=168279
Wednesday, January 19, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment