மதுரை : மேலவை வாக்காளர் பட்டியலில் மதுரை மாவட்டத்தில் பட்டதாரி தொகுதியில் 16 ஆயிரத்து 715 பேரும், ஆசிரியர் தொகுதியில் 1555 பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.மேலவை தேர்தல் தமிழ்நாடு தெற்கு மத்திய தொகுதி வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த நவம்பரில் வெளியிடப்பட்டது. பட்டதாரி தொகுதியில் 22 ஆயிரத்து 970 பேரும், ஆசிரியர் தொகுதியில் 2532 பேரும் இருந்தனர். பின் புதிய வாக்காளர் சேர்க்கை, திருத்தம், நீக்கம் செய்ய விண்ணப்பித்தனர். புதியபட்டியலை கலெக்டர் காமராஜ் நேற்று வெளியிட்டார். அவர் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் பட்டதாரிகள் 51 ஆயிரத்து 164 பேர் உள்ளனர். (ஆண்கள்- 30,395, பெண்கள்- 20,769) ஆசிரியர் தொகுதியில் 6400 பேர் உள்ளனர். (ஆண்கள் 2749, பெண்கள் 3651).மேலவை தொகுதியின் மாவட்ட உள்ளாட்சி அமைப்பு தொகுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. இதில் லோக்சபா, சட்டசபை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட பஞ்சாயத்து, பஞ்.,யூனியன் உறுப்பினர்கள் 659 பேர் உள்ளனர். இதில் தகுதியுள்ளோரை சேர்க்க, திருத்தம் செய்ய (சேர்க்கை- படிவம் எண்- 17, திருத்தம்- படிவம்8) ஜன. 27ம் தேதிக்குள் டி.ஆர்.ஓ.,விடம் விண்ணப்பிக்க வேண்டும். பட்டதாரி, ஆசிரியர் தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியல் டி.ஆர்.ஓ., மாநகராட்சி உதவி கமிஷனர், தாலுகாக்களில் வெளியிடப்படும். உள்ளாட்சி அமைப்பு தொகுதிக்கான வாக்காளர் பட்டியல் டி.ஆர்.ஓ., மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வெளியிடப்படும் என்றார்.மேலும் அவர் கூறியதாவது:சட்டசபை தேர்தலுக்கு மதுரை மாவட்டத்தில் ஓட்டும் எண்ணுவதற்காக, நாகமலை புதுக்கோட்டை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி, தமிழ்நாடு பாலிடெக்னிக், மருத்துவ கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளன. வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் சோழ
வந்தான், உசிலம்பட்டி தொகுதி, பாலிடெக்னிக்கில் திருமங்கலம், திருப்பரங்குன்றம் தொகுதிகள், மற்ற ஆறு தொகுதிகள் மருத்துவ கல்லூரியிலும் வைத்து எண்ணப்படும். இதுகுறித்து தேர்தல் கமிஷன் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது, என்றார்.
courtesy : http://www.dinamalar.com/district_detail.asp?id=170677
0 comments:
Post a Comment