Monday, January 24, 2011

மதுரையில் 930 போலீசாருக்கு பிப்.,1 முதல் பயிற்சி

Monday, January 24, 2011

மதுரை : சமீபத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட போலீசாரில் 930 பேருக்கு பிப்.,1 முதல் மதுரையில் ஆறுமாத பயிற்சி அளிக்கப் படுகிறது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம், கிரேடு 1 பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாநிலம் முழுவதும் பிப்.,1 முதல் ஆறுமாத பயிற்சி துவங்குகிறது. மதுரையில் உள்ள மூன்று பயிற்சி பள்ளிகளில் 930 பேர் பயிற்சி பெறுகின்றனர். டி.எஸ்.பி.,க்கள் மதுரைச்சாமி, ஜான் ஜெயபால், முத்துச் சாமி ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர். இதற்காக இவர்களுக்கு சென்னையில் இரண்டு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. புதிய போலீசார் முதல் ஐந்து மாதம் அடிப்படை சட்டங்கள் குறித்த பயிற்சியும், ஒருமாதம் களப்பயிற்சியும் பெறுகின்றனர். காலை 6 மணிக்கு கவாத்து பயிற்சியும், 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை சட்ட வகுப்பும், மாலை 6 மணி வரை மீண்டும் கவாத்து பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

Courtesy : http://www.dinamalar.com/district_detail.asp?id=171384

0 comments:

Post a Comment

 
Madurai -The City Never Sleeps ◄Design by Pocket, BlogBulk Blogger Templates